வங்கி தேர்வுகளில் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு சதி?- வீரமணி கண்டனம்

கி.வீரமணி
- News18
- Last Updated: October 18, 2018, 4:01 PM IST
மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத்தவர்களும் உள்ளே நுழைய வழி செய்யும் சூழ்ச்சியைக் கண்டித்தும், பழைய நிலையே தொடரவேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் எழுத்தர் (கிளார்க்) பணிகளுக்கு, அந்தந்த மாநிலத்தவர்க்கே இதுவரை வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அந்தந்த மாநில மொழிகளைப் படிக்க, எழுத, பேசவேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணிகளில் இங்கே தமிழ்நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தன.
வங்கித் தேர்வு நடத்தும் இந்திய வங்கித் தேர்வு நிறுவனம் சென்ற ஆண்டு வெளியிட்ட விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே என்று விளம்பரப்படுத்தியது. இதன் காரணமாக வேறு மாநிலத்தவரும் தமிழ்நாட்டில் தேர்வு எழுதி, எழுத்தர் (கிளார்க்) பணிகளை அபகரிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. போராட்ட உணர்வுகள் வெடித்துக் கிளம்பவேண்டிய காலகட்டமாக இன்றைய சூழ்நிலை மாறி வருகிறது. ஒரு பக்கத்தில் மதவாதப் பிரச்னைகளை கிளறிவிட்டு, மற்றொரு பக்கத்தில் இதுபோன்ற சன்னமான சூழ்ச்சி வலைகளைப் பின்னும் மத்திய பி.ஜே.பி. அரசைத் தமிழ்நாட்டு மக்கள் சரியானபடி, அடையாளம் காணவேண்டும்.
வங்கிப் பணி என்பது உள்ளூர் மக்களின் அன்றாட தொடர்புடையது. இதில் மொழி தெரியாதவர்களை நியமித்தால் நடைமுறையில் சிக்கல்கள்தான். மாநில மொழி அறிந்தவர்களே தேர்வு எழுதும் பழைய நிலை நீடிக்கவேண்டும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, தீர்வு காணவேண்டும்’’ என்று அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார்.
கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் எழுத்தர் (கிளார்க்) பணிகளுக்கு, அந்தந்த மாநிலத்தவர்க்கே இதுவரை வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அந்தந்த மாநில மொழிகளைப் படிக்க, எழுத, பேசவேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணிகளில் இங்கே தமிழ்நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தன.
வங்கித் தேர்வு நடத்தும் இந்திய வங்கித் தேர்வு நிறுவனம் சென்ற ஆண்டு வெளியிட்ட விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே என்று விளம்பரப்படுத்தியது. இதன் காரணமாக வேறு மாநிலத்தவரும் தமிழ்நாட்டில் தேர்வு எழுதி, எழுத்தர் (கிளார்க்) பணிகளை அபகரிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.