தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாடு சேலத்தில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில், தேசியக் கல்வி கொள்கை வரைவு மசோதாவை திரும்பப் பெறவும், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றை திரும்பப் பெறவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 25 தீர்மானங்கள், திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.