ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அவதூறு பரப்புவோர் விடுதலை.. நீதிபதிகளை கடுமையாக சாடும் கி. வீரமணி

அவதூறு பரப்புவோர் விடுதலை.. நீதிபதிகளை கடுமையாக சாடும் கி. வீரமணி

கி.வீரமணி

கி.வீரமணி

நீதிக்கு விரோதமாக அவதூறுகளை அள்ளி வீசுவோரை விடுதலை செய்ய , கிளைக் கழகம்போல் சில நீதிபதிகள் நடப்பதை திராவிடர் கழகம் கண்டிக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையுடைய நீதிபதிகளால் விடுதலை செய்யப் படுகின்றனர் நெறிகெட்டு வளைந்த நீதித்துறையை நிமிர்த்தும் முயற்சியில் திராவிடர் கழகம் ஈடுபடும் என  கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

  தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி .வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “உடலளவில் பெரியார் மறைந்தாலும் இன்றும் உணர்வால் பெரியார் மயக் கொள்கை இளைஞர்கள் , மகளிர் ஒடுக்கப்பட்டோரால் பின்பற்றப்படுகிறது. பெரியார் உலகம் உருவாகி வருகிறது என்று சொல்லும் விதமாக பெரியாரியம் பரவியுள்ளது .

  Also Read:  வேலூர் பொன்னையாற்று பாலத்தில் விரிசல்.. 23 ரயில்கள் ரத்து.. பயணிகள் அவதி

  இப்போதும் பெரியார் தேவைப்படுகிறார். தமிழகத்தில் சமூக நீதிக்கான சரித்திரி நாயகராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் , இந்தியளவில் முதன்மையான முதலமைச்சராக அவர் இருக்கிறார்.சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மற்றும் பெண் நிருபர்களை தவறாக பேசியவர்கள் மீதான வழக்குகளை, ஆர்எஸ்எஸ் சிந்தனையில் இருக்கும் நீதிபதிகள் சிலர் தள்ளுபடி செய்து , அவர்களை விடுதலை செய்கின்றனர். சமூக நீதியை , பாலியல் விவகார நீதியை தடுக்கும் செயல் இது.

  இதே நிலை தொடர்ந்தால் திராவிடர் கழகம் முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து , நீதித்துறை நெறிகெட்டு வளைந்ததை நிமிர்த்தி வைக்கும் முயற்சியில் ஈடுபடும்.நீதிக்கு விரோதமாக அவதூறுகளை அள்ளி வீசுவோரை விடுதலை செய்ய , கிளைக் கழகம்போல் சில நீதிபதிகள் நடப்பதை திராவிடர் கழகம் கண்டிக்கிறது.

  Also Read:  Rajendra Balaji : தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார்?

  பெரியர் கருத்தில் ஒரு எழுத்தை மாற்றினாலும் பெரியாரை திரிபுவாதத்திற்கு ஆளாக்கி விடுவார்கள். பெரியார் எழுத்துகளை பயன்படுத்த அனுமதி கேட்போருக்கு வார்த்தை மாறாமல் பயன்படுத்த அனுமதித்து வருகிறோம். கண்டவர்களும் கண்ட இடத்தில் நுழைய முடியாது , நுழையவும் கூடாது” என்றார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Court, DMK, Dravidar Kazhagam, Judge, K.Veeramani