Home /News /tamil-nadu /

"ஜனநாயகத்தை பாதுகாக்க இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும்"-தேர்தல் முடிவு குறித்து கீ.விரமணி பேட்டி

"ஜனநாயகத்தை பாதுகாக்க இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும்"-தேர்தல் முடிவு குறித்து கீ.விரமணி பேட்டி

கி.வீரமணி

கி.வீரமணி

மதசார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகத்தை பாதுகாக்க இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மாசோதாவும் மக்களின், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் படி உள்ளது. மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளோம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு மிகத்தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.

ஈ.வெ.ரா மணியம்மையார் 103வது ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் திடலில் கொண்டாடப்பட்டது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பற்றி பேச வேண்டும். அவர்கள் எடுக்கும் ஆயுதத்தை நாமும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாம் கடந்து வந்த பாதையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எந்த மதத்தை கொண்டு வந்து திணிக்கிறார்களோ, அவ்வாறு நடந்தால் இழக்க போவது என்ன என்பதை மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்ல  வேண்டும். இதை அனைவரும் ஆட்சி, அரசியலை தாண்டி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: 5 மாநில சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்.. தமிழகத்தில் பாஜகவினர் கொண்டாட்டம்...


மருத்துவத்தில் அனைவரும் நம்பக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் நுழைவு தேர்வு கொண்டு வந்து நம் பிள்ளைகள் படிக்க முடியாத சூழலை ஏற்படுத்துகிறார்கள். நாம் மிகுந்த எச்சரிக்கையோடு அணுக வேண்டிருக்கிறது.

மத்திய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மாசோதாவும் மக்களின், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் படி உள்ளது. அனைத்தையும் சந்தேக கண்ணோட்டத்தில், அரசியலாக பார்க்க வேண்டி உள்ளது. இதை விட்டுவிட்டோம் என்றால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளோம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு மிகத்தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

பெண் மக்கள் பிரதிநிதிகள் ஆண்களை விட பத்து மடக்கு அதிகம் பணியாற்றினால் தான் அங்கீகரிக்கப்படுகிறார்கள். எனவே பெண் பிரதிநிதிகள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டில் இருந்து கையெழுத்து போட்டால் போதும் என்று இருந்தால், அது எதிர்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம்," என்றார்.

மேலும் படிங்க: தமிழகத்தில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு... முதன்முறையாக 2 துறைகளுக்கு டிஜிபி பதவி உருவாக்கம்..


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "மதசார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகத்தை பாதுகாக்க இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதையே இந்த முடிவுகள் காட்டுவதாகவும்,  அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைகளை எதிர்த்து போராட மக்களை ஆயத்தப்படுத்தபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
Published by:Murugesh M
First published:

Tags: Election 2022, K.Veeramani

அடுத்த செய்தி