• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆடிமாத பூஜை: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக போராட்டம் - திராவிட மாணவர் கழகம் அறிவிப்பு

ஆடிமாத பூஜை: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக போராட்டம் - திராவிட மாணவர் கழகம் அறிவிப்பு

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை அழைத்து பூஜை செய்ததாக துணைவேந்தருக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக திராவிட மாணவர் கழகம் அறிவித்துள்ளது.

  • Share this:
    சென்னைப் பல்கலைக்கழக திராவிட மாணவர் கழகம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிகோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், ‘சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டு கடந்த 23-07-2021-ம் தேதியன்று ஆடி வெள்ளிக்கிழமை அன்று துணைவேந்தர் அலுவலகத்தில் பெண் பேராசிரியர்களை வரவழைத்துப் பூஜை செய்துள்ளனர்.

    பல்கலைக்கழகத்தின் மதச்சார்பற்ற மாண்பினை அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு எதிராகச் சிதைப்பது பெரும் குற்றம். விதிகளை மீறிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை காலை 11 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன் திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    100 பேருக்கு மிகாமல் பிரின்சு தலைமையில் போராட்டம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: