ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாதாள சாக்கடை பணிகள் தொடர்பாக தமிழக அரசு அதிரடி உத்தரவு

பாதாள சாக்கடை பணிகள் தொடர்பாக தமிழக அரசு அதிரடி உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும், உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படியும்  சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், , தற்போது நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. முந்தைய ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், மழையால் அதிகளவில் பாதிக்கப்படும் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு  நடவடிக்கை  எடுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.

  உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து நகராட்சி நிர்வாகத்துறை பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், பாதிப்புகளை குறைக்கும் வகையில் சில பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறுபாலங்களுக்கு கீழ் படியும் கழிவுகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

  சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களுக்கு கீழ் இயந்திரங்கள் செல்ல முடியாத இடங்களில் பல ஆண்டுகளாக குவிந்துள்ள கழிவு  மேடுகளை அதற்கான இயந்திரங்கள் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும், உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  Also Read: PFI தடையை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - கோவையில் பரபரப்பு

  இணைப்பு இல்லாத இடங்களில் உரிய இணைப்பை ஏற்படுத்தி மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய பணிகளை மழைக்காலத்துக்குப் பின்னரே ஒப்புதல் அளித்து தொடங்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னையில் தற்போது சென்னை மாநகராட்சியால் 16 சுரங்கப்பாதைகள், இதர துறைகளால் சில சுரங்கப்பாதைகள் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுரங்கப்பாலங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் துறைகளின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதற்காக ஏற்கெனவே உள்ள மோட்டார் பம்புகளின் திறனை விட கூடுதலாக 50 சதவீதம் திறன் கொண்ட பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும், மழைநீரை பாலங்களில் இருந்து வெளியேற்றினால், அது மீண்டும் பாலத்துக்குள் வராமல் தடுக்க, கால்வாய்களில் திருப்பி விடப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மழை பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Arunkumar A
  First published: