• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு

ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் இந்த ஆண்டு 3940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார் அமைச்சர் கே.என்.நேரு.

  • Share this:
தமிழகம் முழுவதும் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எல்லாம் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, தாம்பரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் எஸ். ராஜா, தாம்பரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுமா என கேள்வி எழுப்பினார்.

அற்கு பதிலளித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, சிட்லபாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கத்துடன், தாம்பரம், அனாகாபுத்தூர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இந்த ஆண்டு 3940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

Also Read : போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேலும் பாதாள சாக்கடை தொடர்பாக செங்கம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் கேள்வி எழுப்பினார். மீண்டும் பதிலளித்த அமைச்சர் நேரு, தமிழகம் முழுவதும் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எல்லாம் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: