தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு... அதற்கு மழைநீர் தேங்கியது காரணமல்ல.. சென்னை மாநகராட்சி விளக்கம்

தேங்கிய மழைநீர்

சென்னையில் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியாகியுள்ள நிலையில், அவருடைய மரணத்திற்கு மழைநீர் தேங்கியது காரணமல்ல என மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

 • Share this:
  சென்னை, கோடம்பாக்கத்தில் ஜண்டா தோட்டம் பகுதியை சேர்ந்த நரசிம்மன். கோடம்பாக்கம் மேம்பாலம் இணைப்பு சாலை அருகே கால்வாயில் விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய மரணத்திற்கு, அங்கே தேங்கி இருந்த மழைநீர் காரணமல்ல என மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

  விபத்து குறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்தி, பள்ளத்தை தற்காலிகமாக சீரமைத்தனர்.  அதன் பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம்  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த விளக்கத்தில், “மழை நீர் தேங்கியதோ, கழிவுநீர் தொட்டியோ மரணத்திற்கு காரணமல்ல” என தெரிவித்துள்ளார். மேலும், “இவர் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு முழு விபரங்கள் தெரிய வரும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க...வேலூர் அருகே அடுத்தடுத்து மூவர் வெட்டிக் கொலை... 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

  ஏற்கனவே நொளம்பூரில் மழைநீர் கால்வாயில் விழுந்து தாயும், மகளும் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: