Home /News /tamil-nadu /

மதுரை மெட்ரோ ரயிலுக்காக சாத்தியக் கூறு அறிக்கை: தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிப்பு

மதுரை மெட்ரோ ரயிலுக்காக சாத்தியக் கூறு அறிக்கை: தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிப்பு

மதுரை மெட்ரோ ரயில்

மதுரை மெட்ரோ ரயில்

கோவை, திருச்சி, நெல்லையிலும் மெட்ரோ ரயில்களை இயக்குவது பற்றிய சாத்தியக்கூறுகள் சம்பந்தமான ஆய்வறிக்கையை தயார் செய்யும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரையில் மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்த சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையை தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு நடத்தப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். மதுரையில் மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்து ஆய்வு செய்ய, தெலங்கானாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு 51 கோடியே 62 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்த புள்ளி விடப்பட்டது.

    இதையும் வாசிக்க: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உணவு பொருள் விலையேற்றம் குறைவு - ஜெயரஞ்சன்..!

    ஆய்வுப்பணி ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில், மே மாதம் இறுதியில் நிறைவடைந்ததை தொடர்ந்து ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.மண் பரிசோதனை, ரயில் செல்லும் வழித்தடம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், " மதுரைக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. மதுரை மெட்ரோ ரயிலுக்கான நகல் சாத்தியக் கூறு அறிக்கை" (Draft Feasibility Report) சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வசம் தரப்பட்டுள்ளது. விரைவில் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் தரப்படும். நீண்ட நாளைய கோரிக்கை. விரைவில் நிறைவேறட்டும்" என்று தெரிவித்தார்.

    மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, நெல்லையிலும் மெட்ரோ ரயில்களை இயக்குவது பற்றிய சாத்தியக்கூறுகள் சம்பந்தமான ஆய்வறிக்கையை தயார் செய்யும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai metro, Metro Rail, Metro rail route

    அடுத்த செய்தி