• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tamil Nadu Assembly Election 2021 : ‘ஏழாவது முறையாக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கிறேன்’ - ராமதாஸ்

Tamil Nadu Assembly Election 2021 : ‘ஏழாவது முறையாக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கிறேன்’ - ராமதாஸ்

ராமதாஸ்

ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை ஆரம்ப பள்ளில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

  • Share this:
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை ஆரம்ப பள்ளில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மரகதாம்விகை ஆரம்பபள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

    அவருடன் மனைவி சரஸ்வதி, மகள் ஸ்ரீகாந்தி, பேரன் பிரதீவன் அவரது மனைவி சம்யுக்தா ஆகியோர் வாக்களித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ராமதாஸ், “நான் ஏழாவது முறையாக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கிறேன். நல்லாட்சி தொடர வேண்டும். கடந்த நான்காண்டு கால ஆட்சி நிலையான ஆட்சி.

    பெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய ஒரு நல்லாட்சி. மீண்டும் இந்த நல்லாட்சி தொடர வேண்டும். நல்லாட்சி என்பது மக்கள் வறுமை இல்லாமல் மூன்று வேளை உணவு அருந்த வேண்டும். விவசாயிகள் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவேண்டும். கல்விக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைத்து உயர் படிப்புக்கான செலவை அரசு ஏற்க வேண்டும்.

    சுகாதாரத்திற்கு மக்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத நிலை வேண்டும். விவசாயிகள் பிரச்சனை கடந்த நான்காண்டுகளில் தீர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாக, பாராட்டும் விதமாக உள்ளது. கருத்துக் கணிப்புகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை கருத்துகணிப்பு அல்லது கருத்துக்கணிப்பு. இட ஒதுக்கீடு குறித்து ஏற்கனவே முதலமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர், இது குறித்து நாளை விளக்கமாக கூறுகிறேன்.” என்றார்.

    ஸ்டாலின் பிரச்சாரம் குறித்து கேள்விக்கு, பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் பிரச்சாரங்களில் பேச்சுகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாத அளவிற்கு இருக்க வேண்டும். ரசிக்க தக்கவாறு விமர்சனங்கள் இருக்க வேண்டும். தரம் தாழ்ந்த விமர்சனங்கள் இந்த தேர்தலில் அது வெளிப்பட்டுள்ளது.

    Must Read : பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு

    விமர்சனம் என்பது தனிநபர் தாக்குதலாக மாறியுள்ளது கட்சியின் கொள்கை குறித்து விமர்சிக்கலாம் ஆனால் தனிநபர்கள், குடும்பம், பெண்களை இழிவு படுத்துவது அதிகரித்துவிட்டது. இனிவரும் தேர்தல்களில் அரசியல் கட்சியினர் தங்களுக்கென சில கோட்பாடுககை வைத்துக்கொள்ள வேண்டும்.” என்று ராமதாஸ் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: