ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Sankaraiah 100 : நூறு வயதிலும் இளைஞராகத் தான் செயல்படுகிறார் சங்கரய்யா - ராமதாஸ் வாழ்த்து

Sankaraiah 100 : நூறு வயதிலும் இளைஞராகத் தான் செயல்படுகிறார் சங்கரய்யா - ராமதாஸ் வாழ்த்து

சங்கரய்யா - ராமதாஸ்

சங்கரய்யா - ராமதாஸ்

மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு வயது என்பது ஓர் எண் தான். அது சங்கரய்யாவுக்கும் பொருந்தும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு வயது என்பது ஓர் எண் தான் என்றும், நூறாண்டை காணும் தோழர் சங்கரய்யா இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும் எனவும் வாழ்த்துவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

  இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், அக்கட்சியின் தமிழ் மாநில முன்னாள் செயலாளருமான சங்கரய்யா இன்று ஜூலை 15 ஆம் தேதி நூறாவது அகவையை எட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு வயது என்பது ஓர் எண் தான். அது சங்கரய்யாவுக்கும் பொருந்தும். அகவை நூறை அவர் எட்டினாலும் அவரது மக்கள்நலப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப் படவில்லை. இந்த வயதிலும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உட்பட பல தளங்களில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் இன்றும் இளைஞராகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

  Read More : நூறு வயது காணும் மூத்த தோழர் சங்கரய்யா அவர்களைப் போற்றுவோம் - மு.க. ஸ்டாலின்

  2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதற்கும் முன்பும், பின்பும் தோழர் சங்கரய்யா அவர்களுடன் நானும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல அறிமுகமும், ஒருவர் மீது மற்றொருவருக்கு மரியாதையும் உண்டு. அது என்றும் தொடரும்.

  Must Read : வாழும் வரலாறாக விளங்கும் தோழர் என்.சங்கரய்யா - சிறப்புத் தொகுப்பு

  தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அதை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் தோழர் சங்கரய்யாவின் நூற்றாண்டு வடிவமைக்கப்பட வேண்டும். நூறாண்டை காணும் தோழர் சங்கரய்யா இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Dr Ramadoss, Marxist Communist Party, Pattali Makkal Katchi‎, Sankaraiah