கொரோனா விழிப்புணர்வு பாடத்தை குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்வோம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது கொள்ளுப்பேத்தி மிளிர் பற்றியது அன்பும், விழிப்புணர்வும் கொண்ட முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போர்முழக்கங்களையும், புரட்சிக் குரல்களையும் எவ்வாறு எழுப்புவாரோ, அதற்கு இணையாக குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்களையும் இனிமையாக இயற்றுவதில் வல்லவர்கள்.
அவர் எழுதிய பெண் குழந்தை தாலாட்டுப் பாடலில்,
“சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலை இளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!
வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!”
“மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!” என்றெல்லாம் வர்ணித்திருப்பார்.
அந்தப் பாடலில் வரும் வரிகளுக்கு ஏற்ப அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலாளான என் கொள்ளுப்பேத்தி மிளிர் பற்றியது தான் இந்தப் பதிவு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மிளிர் மருத்துவர் அன்புமணி இராமதாசின் பெயர்த்தி. சம்யுக்தா - பிரீத்திவன் இணையரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருத்தி. மிளிருக்கு இப்போது வயது இரண்டரை.
என்னைக் காண்பதற்காக நேற்று வந்தபோது நான் அமர்ந்திருந்த அறையின் கதவுகளை முழங்கை மூட்டால் (Elbow Joint) திறந்து கொண்டு உள்ளே வர முயன்றாள். ஆனால், பலமான அறைக்கதவை திறக்க அந்த மெல்லியலாளால் முடியவில்லை. மிளிருடன் வந்த அக்குழந்தையின் சித்தி கதவை திறக்க இருவரும் உள்ளே வந்தனர்.

பேரப்பிள்ளைகளுடன் ராமதாஸ்
மிளிரை எனது மடியில் அமர்த்தி என்னம்மா செய்தாய்? என்று கேட்டேன். அதற்கு அந்தக் குழந்தை அளித்த பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்
கொரோனா பரவத் தொடங்கிய நேரம். அப்போது கதவுகளை கைகளால் தள்ளித் திறந்தால் அதில் உள்ள கிருமிகள் கைகளில் ஒட்டிக் கொள்ளும். அத்துடன் கைகளை முகத்தில் வைத்தால் கொரோனா கிரிமி தாக்கக் கூடும் என்பதால் கதவுகளை முழங்கை மூட்டுகளால் தான் திறக்க வேண்டும் என்று மிளிருக்கு அவரது தாத்தா அன்புமணி இராமதாஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அதன்பின் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும், தாத்தா சொல்லிக்கொடுத்தவாறு, எங்கு சென்றாலும் முழங்கை மூட்டைக் கொண்டே கதவைத் திறக்க முயல்கிறது அந்தக் குழந்தை. இது பாராட்டப்பட வேண்டிய செயல்தானே!
Must Read : ரயில்வே பணிகளில் 50% இடங்களை தமிழ்நாட்டவருக்கு ஒதுக்க வேண்டும்.. 88% பணிகள் பிற மாநிலத்தவருக்கா? - ராமதாஸ்
சென்னையில் வெளியில் நடமாடும் மக்களில் 50 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிவதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்தி வருத்தமளித்தாலும் மிளிரின் செயல் மகிழ்ச்சியளித்தது.
https://www.facebook.com/445102055654086/posts/1879399212224356/
குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்வோம்
கொரோனா விழிப்புணர்வு பாடத்தை!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.