6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 23% உயர்வு - நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்

தமிழக அரசும் ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

 • Share this:
  சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து 875 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.

  கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து 165 ரூபாய், அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்.

  Must Read : டீசல் விலையைக் குறைக்காதது ஏன்? - பழனிவேல் தியாகராஜன் விளக்கம் 

  சமையல் எரிவாயு விலையைக் குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

     வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25ரூபாய் உயர்த்தப்பட்டதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தியுடன் காணப்படுகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: