• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வீரப்பன் அண்ணனை விடுதலை செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

வீரப்பன் அண்ணனை விடுதலை செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

ராமதாஸ்

ராமதாஸ்

74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. : ராமதாஸ்

  • Share this:
    அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முன்வந்துள்ளது. அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழா, கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி மனிதாபிமான அடிப்படையில், ஆயுள் தண்டனை பெற்ற 700 கைதிகளை அரசு முன்கூட்டியே விடுதலை செய்யும் என்றும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், கைதிகளை விடுவிப்பது தொடர்பான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் பாலியல் பலாத்காரம், பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்திற்கு எதிரான குற்றம், கள்ள நோட்டு தயாரித்தல், மதம் வன்முறையில் ஈடுபட்டவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம், பொருளாதார குற்றங்கள், கடத்தல் மற்றும் கள்ளச்சந்தை உள்ளிட்ட மோசமான குற்றங்களைச் செய்தவர்களை தவிர மற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் வீரப்பன் அண்ணன் மாதையனை விடுவிக்காதது ஏன் என்று பாமக நிறுவனர் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

    அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வாழ்நாள் தண்டனை கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது!

    மாதையன் எந்த குற்றமும் இழைக்கவில்லை; அவர் பொய்வழக்கில் தான் கைது செய்யப்பட்டார்; அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 34 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும் அவரை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வராதது எந்த வகையிலும் நியாயமல்ல!

    74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு மாதையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: