ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா

Chennai IIT : சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்திருப்பதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துளளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 55 ஆக உயர்ந்திருப்பதாக தெரிவித்தார்.

  அதன்படி, ஐஐடியில் 1,420 பேருக்கு பரிசோதனை செய்ததில், வளாகத்தில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

  தொற்று பாதித்த அனைவருக்கும் லேசான அறிகுறிகளே உள்ளன. தமிழகத்தில் இதுவரை எக்ஸ்.இ வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும், கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனைக்கு செல்ல வேண்டும்” என்றும் கூறினார்.

  சென்னை ஐஐடியில் பயின்று வரும் மாணவர்கள் 3 பேருக்கு சில தினங்களுக்கு முன்னர் லேசான கொரேனா அறிகுகள் இருந்ததால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு தொற்று உறுதியானது. வெவ்வேறு இடங்களில் இருந்து அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தொற்று உறுதியான மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 9 பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது.

  அதனைத் தொடர்ந்து, மேலும் 666 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று வரை ஐஐடியில் மட்டுமே 30 பேருக்கு 3 நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருப்பது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Must Read : இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி - தமிழக மின் பற்றாக்குறையை சமாளிக்க அரசு முடிவு

  தமிழ்நாட்டில் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொரோனா தினசரி தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (நேற்று) தொற்று பாதிப்பு 57 ஆக அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மாஸ்க் மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Chennai IIT, Corona, Radhakrishnan