• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

ஆசிரியர்கள் தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராகவும், கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

  • Share this:
சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, ஆசிரியர் தினமான நேற்று வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், ஆசிரியர்கள் தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராகவும், கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருத்தல் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.

அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவுக் கண்ணைத் திறந்திடும் மகத்தான பணியினை ஆற்றிவரும் ஆசிரியப் பெருமக்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகின்றன . ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து அவர்களின் வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆசிரியர் தினவிழா மற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது .  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்  தலைமையேற்று சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கான பாராட்டு சான்றிதழ், வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ .10,000 ரொக்க பரிசு ஆகியவற்றை வழங்கினார்.

2020-21 ஆம் கல்வியாண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் 6 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், 6 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மேலும் 1 மெட்ரிக் பள்ளி ஆசிரியர் என மொத்தம் 13 ஆசிரியர்கள் மாநிலத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

இந்த ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழிற்கல்வி பாடத்தினை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்த்தல், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கற்றல்பணி தொடர வழிவகை செய்தல், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொதுமக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்று பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கொரோனா நோய்தொற்று காலங்களில் பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றுதல் ஆகியப்பணிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும் . அப்படிப்பட்ட பணியை மாணவ-மாணவியர்களுக்கு கற்பிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராகவும், கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருத்தல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என தெரிவித்தார்.

Must Read : ஊரக உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

விருது பெற்ற ஆசிரியர்கள்: 

பெத்தநாயக்கன்பாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி , தலைமை ஆசிரியர், திரு.சி.மாதேஸ்வரன்; இளம்பிள்ளை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் திரு.சு.ரமேஷ்; தாண்டவராயபுரம், அரசு மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் திரு.வ. ரவிக்குமார்; செட்டிச்சாவடி, அரசு உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் திரு.ரா.ரா.சுரேஷ்குமார்; கொங்குபட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் திரு.சு.பாஸ்கர்; பண்ணப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி, தொழிற்கல்வி ஆசிரியர் , திரு.அ.ஆறுமுகம்; வாழப்பாடி ஒன்றியம், வாழப்பாடி காலனி , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி க.ஷபிராபானு; வாழப்பாடி ஒன்றியம், காளியம்மன்புதுார், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமையாசிரியர் திரு.மு.ஸ்ரீதர்; சேலம் நகர்புறம் ஒன்றியம், அரிசிபாளையம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, இடைநிலை ஆசிரியர் திரு.இரா.சரவணன்; காடையாம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர் திரு.இரா.பாரதி; சேலம் ஊராட்சி ஒன்றியம், கன்னங்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் திருமதி எம்.ஜே.சாந்தி; கெங்கவல்லி ஒன்றியம் ஓடைக்காட்டுப்புதுார், அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி, இடைநிலை ஆசிரியை திருமதி வே . சத்யா; சேலம், குளுனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முதல்வர் அருட்சகோ.ரோஸ்லின் ஆகியோர் விருது பெற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: