அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லோரும் போகவேண்டும்? : கூட்டணி ஆட்சியை விரும்பும் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி

மாற்று சிந்தனையாளர்களை, முற்போக்கு சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்க முடியுமா என்றும், மாற்றம் என்ற விடியலை நோக்கி இவர்கள் பயணிப்பார்களா எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 • Share this:
  அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லோரும் போக வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இதற்கு மாற்றாக கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.

  பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள கிருஷ்ணசாமி, “தமிழகத்தில் மாற்று அரசியல் சாத்தியமா?” என்ற கேள்விக்கு, “தமிழகத்திற்கு விடிவுகாலத்தை உருவாக்கித் தர முடியுமா, மாற்று சிந்தனையாளர்களை, முற்போக்கு சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்க முடியுமா என்றும், மாற்றம் என்ற விடியலை நோக்கி இவர்கள் பயணிப்பார்களா எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்ற சிந்தனைக் கருத்தோட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

  ஏன் திமுக, அதிமுக என்ற இரண்டு அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் மட்டுமே போக வேண்டும். இதற்கு மாற்றாக, எல்லோரும் சேர்ந்து ஒரு கூட்டணி ஆட்சியை உருவாக்க முடியும் என்ற சிந்தனையைத் தூண்ட விரும்புகிறேன்.

  Must Read : ‘மந்தமான நிர்வாகம்’ ஜெயலலிதாவே விமர்சித்ததாக கடிதத்தைக் காட்டி ஓபிஎஸ் மீது ஸ்டாலின் காட்டம்

   

  ஆட்சி என்றார் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும்.” இவ்வாறு டார்டர் கிருஷ்ணசாமி பதிலளித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: