கோவில் நிலங்கள் கொள்ளை கூடாரங்களாக உள்ளன.. அதிகாரிகள் எப்படி பணக்காரர்களாகினர் - கேள்வி எழுப்பும் கிருஷ்ணசாமி

கோவில் நிலங்கள் கொள்ளை கூடாரங்களாக உள்ளன.. அதிகாரிகள் எப்படி பணக்காரர்களாகினர் - கேள்வி எழுப்பும் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் உள்ள பெரிய கோவில் நிலங்கள் எல்லாம் இன்று கொள்ளை கூடாரங்களாக மாற்றப்பட்டுள்ளது. அவை தடுக்கப்பட வேண்டும்.

  • Share this:
தமிழக கோவில்களை அனைத்து விதமான பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், கோவில்  நிலங்கள் மீட்கப்பட வேண்டும் எனவும்,  வருவாய் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில்  புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விவேக் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது என தெரிவித்தார். 'திரையுலகில், கலைவாணருக்கு பிறகு, அவர் நடித்த திரைப்படங்களில் பகுத்தறிவு உண்டாக்கும் வகையிலும், மூடநம்பிக்கைகளை உடைக்கும் வகையில் வசனங்கள் அமைத்து தனது கடமையை சிறப்பாக செய்தவர். முற்போக்கு சிந்தனையாளராக செயல்பட்டவர் . அவரது இழப்பு தமிழகத்திற்கான இழப்பு . ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மறுநாள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் , இது குறித்து முறையான மருத்துவ ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என தெரிவித்த கிருஷ்ணசாமி, இதனால் பொதுமக்கள் பீதியடைக்கூடாது எனவும்  தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பெரிய கோவில் நிலங்கள் எல்லாம் இன்று கொள்ளை கூடாரங்களாக மாற்றப்பட்டுள்ளது. அவை தடுக்கப்பட வேண்டும்.  கோவில் சொத்துகளில் இருந்து வரும் வருமானம் மக்களுக்கு தான் சென்றடைய வேண்டும். கோவில்களை அனைத்து விதமான பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். நிலங்கள் மீட்கப்பட வேண்டும்.  வருவாய் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தவர் , இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகள் எப்படி பெரும் பணக்காரர் ஆகின்றனர் என கேள்வி எழுப்பினார்.

ஊழல் சாம்ராஜியமாக கோவில்கள் மாற்றப்பட்டுள்ளது எனவும் ஊழலின் தோற்றுவாயே கோவிலில் இருந்து தான் துவங்குகிறார்கள் எனவும் தெரிவித்தார். கோவில்களை முழுமையாக பாதுக்காக்க என்ன நடவடிக்கை தேவை என்பதை ஆய்வு செய்ய வேண்டும் ,இந்து அறநிலையதுறையில் என்னென்ன விஷயங்கள் நடந்துள்ள என்பது குறித்து ஒரு மாத காலத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தெரிவித்தார்.
Published by:Ramprasath H
First published: