‘கொரோனா தொற்று சவாலாக உள்ள நேரம்...’ : முதலமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு கிருஷ்ணசாமி வாழ்த்து

டாக்டர் கிருஷ்ணசாமி

முதலமைச்சராக பொறுப்பேற் உள்ள மு.க.ஸ்டாலினுக்கும், புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு புதிய தமிழகம் கட்சி திறந்த மனப்பான்மையுடன் துணைநிற்கும் என்று கூறி டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இது குறித்து கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து புதிய தமிழகம் கட்சிக்கு பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

  மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  கொரோனா பெருந்தொற்று சவாலாக உள்ள நேரத்தில் வரும் மே 7ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். திமுக பல்வேறு விதமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.

  பதவி ஏற்றவுடன் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழக மக்களை விடுவிக்கவும், தமிழக மக்கள் மீதான பல்வேறு பொருளாதார, சமூக சுமைகளை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

  புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசின், தமிழக மக்களின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு புதிய தமிழகம் கட்சி திறந்த மனப்பான்மையுடன் துணைநிற்கும்.

  Must Read : வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 300 டன் கொரோனா நிவாரண பொருட்கள் : 5 நாட்களில் 25 விமானங்கள்

   

  இந்த தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை (05.05.2021) மாலை 02.30 மணி அளவில் கோவை பொதிகை இல்லத்தில் நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: