கிரிக்கெட் விளையாட்டில் தகராறு, 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை!

3 மாதங்களுக்கு முன்பு வண்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையில், இவர்கள் இருவரும் சேர்ந்து அடித்ததாகவும் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 7, 2019, 9:09 PM IST
கிரிக்கெட் விளையாட்டில் தகராறு, 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை!
இரட்டை கொலை
Web Desk | news18
Updated: July 7, 2019, 9:09 PM IST
நாகர்கோவில் அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தென்தாமரைகுளத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 20 ) வண்டி குடியிருப்பை சேர்ந்த அர்ஜூனன் (வயது 17) இவர்கள் வண்டிகுடியிருப்பு பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றனர்.

அங்கு இவர்களுக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் அவர்கள் இருவரும் சி.டி.எம்.புரம் அருகே சித்திரை திரு மகராஜபுரம் என்ற இடத்தில் கால்வாய் கரையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது அவர்களை 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் வழி மறித்து உள்ளனர்.

அப்போது அவர்களிடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அஜித் மற்றும் அர்ஜுனன் ஆகியோரை அந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொலை செய்யப்பட்ட இருவரும் கூலி வேலை செய்து வந்தவர்கள்.

தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3 மாதங்களுக்கு முன்பு வண்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையில், இவர்கள் இருவரும் சேர்ந்து அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் ஆனது முன்விரோதம் காரணமாகவே நடைபெற்றது என்பது தெளிவாகும் வரை, கொலைக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .இந்த கொலையை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

Also watch: கணவரை காணவில்லை: விளம்பரத்தால் சிக்கிய பாபநாசம் பட நடிகை! 

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...