ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இலங்கை தமிழ் அகதிகள்

இலங்கை தமிழ் அகதிகள்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்கும் விஷயத்தில் அமைச்சர் பாண்டியராஜன் தவறான தகவலை தெரிவித்து உரிமை மீறியதாக திமுக

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பான விவாதத்தில் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சிகள், அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தன.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, கடந்த கூட்டத்தொடரின்போது, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சாத்தியம் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு சட்டத்தில் இடமில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை எழும்போது, பொய்யான தகவலைச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக அவையில் தவறான தகவலைக் கொடுத்தமைக்கும், இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு கேடுவிளைக்கும் வகையில் நடந்து கொண்டதற்கும் அவர் மீது உரிமை மீறல் விதி 219-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் பாண்டியராஜன், இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேதான் உள்ளது. 3 விதமான இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளார்கள். அதில் நாடற்ற தமிழர்கள் எனும் அடிப்படையில் இதுவரை 4,69,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் குடியுரிமையை இழந்து மற்றொரு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்கள் வசித்த நாட்டில் உள்ள அவர்களின் சொத்துக்களை இழக்க நேரிடும் என்பதால் தமிழகத்திற்கு வந்த அகதிகளில் 59,000 நபர்கள்தான் வசிக்கிறார்கள்; மீதம் உள்ளவர்கள் தூதரகம் மூலம் அவர்களது நாட்டிற்கே சென்றுவிட்டார்கள்.

இரட்டைக் குடியுரிமை வழங்குவது மத்திய அரசால் எடுக்கப்பட வேண்டிய முடிவு மட்டுமே. இதை நீதிமன்றங்களும் கூறியுள்ளன. இலங்கைத் தமிழர்கள் இரட்டைக் குடியுரிமை பெறுவதில் தமிழக அரசின் நிலைப்பாடு சரியாக உள்ளது என்றார்.

அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, "அமைச்சர் தெரிவித்தது உரிமை மீறல் இல்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது" என்று சபாநாயகர் தெரிவித்தார். அமைச்சர் பாண்டியாஜன் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். உடன், காங்கிரஸ் உறுப்பினர்களும் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் வெளிநடப்புச் செய்தனர்.

Also see:

Published by:Rizwan
First published:

Tags: ADMK, DMK, Srilankan Refugees, Tamil Refugees