நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாகியுள்ளது. இதன்படி, வாகனங்கள் சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல மின்னணு பணம் வசூல் செய்யப்படும். அதேநேரத்தில் ஃபாஸ்டேக் அட்டை பெறாதவர்களிடம் ஒவ்வொரு முறையும் இருமடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக வாடகைக் கார் ஓட்டுவோருக்கு கடுமையான சிரமத்தை தருவதாக சொல்கிறார்கள். இதனால், இருமடங்கு கட்டணத்தை செலுத்த முடியாமல் சுங்கச்சாவடி அருகே சாலை ஓரங்களில் வாகனங்களை குறிப்பாக சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் கார்களுக்கு ஒரு முறைக்கான கட்டணம் ₹ 65 என்றால் பாஸ்டேக் அட்டை இல்லாதவர்களிடம் ₹ 130 வசூலிக்கப்படுகிறது. சிறிய சரக்கு வாகனங்களுக்கான ஒரு முறைக்கட்டணம் ₹ 115 என்பதை ₹ 230 ஆகவும் லாரிகளுக்கு ₹ 225 என்பதை ₹ 450 ஆகவும் வசூலிக்கப்படுகிறது. இதனால் திட்டமிட்டதை விட கூடுதல் செலவாகிறது. இதை வாடிக்கையாளர்கள் மீதுதான் சுமத்த நேரிடும் என்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றூம் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க..சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக சார்பில் விருப்ப மனு அளிப்பதற்கான தேதிகள் அறிவிப்பு
‘அனைவரிடமும் ஸ்மார்ட் போன் வசதியின்மை, குறைந்தபட்ச தொகை இருப்பு உள்ளிட்ட நடைமுறைப் பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்க, கொரோனாவின் தாக்கத்தால் பொருளாதார இழப்பு, தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சிக்கித் தவிக்கும் தங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என்பது பெரும் நெருக்கடியாக இருக்கிறது. கொரோனா நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், பாஸ்டேக் கட்டாயத்தை தள்ளி வைக்க வேண்டும்.
குறிப்பாக பாஸ்டேக் அட்டை பெறாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் என்பதை உடனே கைவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் குறிப்பாக 80% மேல் பாஸ்டேக் அட்டை பெற்றுள்ளனர். அதற்கேற்ப நவீன இயந்திரங்களையும் பொருத்தியுள்ளோம். இதனால் சுங்கச் சாவடிகளில் காத்திருக்காமல், விரைந்து செல்லலாம். நேரம், எரிபொருள் மிச்சமாகும் என்று சுங்கச் சாவடி ஊழியர்கள் சொல்கிறார்கள்.
மேலும் படிக்க...அமலுக்கு வந்தது ஃபாஸ்டேக் முறை
மேலும், ஃபாஸ்டேக் கட்டாயத்தை பொருத்து புதிதாக ஃபாஸ்டேக் அட்டை பெருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக சுங்கச்சாவடி அருகிலேயே தனியார் நிறுவன ஊழியர்கள் சிறப்பு முகாம் அமைத்து சில நிமிடங்களிலேயே ஃபாஸ்டேக் அட்டை வழங்கி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.