Home /News /tamil-nadu /

வாக்காளர் அட்டை இல்லையா..? ஓட்டு போட இந்த ஆவணம் இருந்தால் போதும்

வாக்காளர் அட்டை இல்லையா..? ஓட்டு போட இந்த ஆவணம் இருந்தால் போதும்

வாக்காளர் அடையாள அட்டை

வாக்காளர் அடையாள அட்டை

தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், தேர்தல் ஆணையம் கூறியுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைத்து வாக்களிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உங்களிடம் வாக்காளர் அட்டை இல்லையா? நீங்களும் நிச்சயம் வாக்களிக்க முடியும். அதற்கு தேர்தல் ஆணையம் கூறியுள்ள ஆவணங்களில் ஒன்று மட்டும் உங்களிடம் இருந்தால் போதுமானது.

    தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

    இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனையின் போது 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட் பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க - திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் வெளிநாட்டு தொழிலதிபர்

    இந்த தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், தேர்தல் ஆணையம் கூறியுள்ள கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைத்து வாக்களிக்கலாம்.

    1. ஆதார் அட்டை
    2. ஓட்டுனர் உரிமம்
    3. பான் கார்டு
    4. பாஸ்போர்ட்
    5. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பணி அட்டை

    இதையும் படிங்க - உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்குச் சாவடியை அறிவது எப்படி? இதோ சிம்பிள் வழி!!

    6. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
    7. புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக பாஸ்புக்
    8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை
    9. அரசு ஊழியர்களின் அடையாள அட்டை
    Published by:Musthak
    First published:

    Tags: Voters ID

    அடுத்த செய்தி