குரங்கம்மை நோய் ,தொற்றுநோய் இல்லை என WHO கூறியுள்ளது. இதனால் குரங்கம்மை குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்றும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ சிகிட்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தொழில்நுட்பவியல் த்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. நிலபரப்பு அதிகம் உள்ள மருத்துவமனை இங்கு அடிப்படை தேவைகள் அதிகம் உள்ளன.
இங்கு பிரேத பரிசோதனை கூடம் அமைக்கவும் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில் பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கம்மை நோய் காண்டறியப்பட்டுள்ளது. இது குறித்தான அச்சம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது தொற்று நோய் இல்லை என WHO தெரிவித்துள்ளது. இதனால் குரங்கம்மை குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம்.
இதை படிக்க: குரங்கு வைரஸ்.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் கடிதம்
குரங்கம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் கண்காணிக்கபடுகின்றனர். அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அவர்களது இரத்த மாதிரிகள் புனே யில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அவர்களுக்கு சிகிட்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறினார்.
செய்தியாளர்: ஐ.சரவணன் - நாகர்கோவில்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.