ஐ.நாவில் நீட் தேர்வு வேண்டாம் என்று முழங்கிய தமிழ்மாணவி!

ஐ.நாவில் நீட் தேர்வு வேண்டாம் என்று முழங்கிய தமிழ்மாணவி!

மாணவி பிரேமலதா

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு வேண்டாம் என்று ஐ.நா.வில் முழங்கியுள்ளார்

  மதுரை மாவட்டம் இளமனூர் அடுத்த கார்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா. இளமனூர் அரசு ஆதிதிராவிட பள்ளியில் படித்த பிரேமலதா, மனித உரிமை குறித்த ஆவணப் படம் ஒன்றில் பேசியுள்ளார். அதனால் அவருக்கு ஐ.நா.வில் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

  இதையடுத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் அக்டோபர் 2-ம் தேதி, பேசிய அவர், ‘தமிழகத்தில் உள்ள சாதிய ஒடுக்குமுறை, நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள், அனிதாவின் மரணம் உள்ளிட்ட விவகாரங்களை எடுத்துரைத்துள்ளார்.

  பிரேமலதா தனது பேச்சில், மனித உரிமைக் கல்வியை அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தமிழக அரசு பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். பிரேமலதாவின் பேச்சுக்கு வாழ்த்துகள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  வீடியோ பார்க்க: 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் பெண் தொழிலதிபர் மது சரண்

  Published by:Sheik Hanifah
  First published: