வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை

”வங்கிகளை இணைப்பது இப்போது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும்.”

வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை
ரவிக்குமார், எம்.பி.
  • Share this:
வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள 10 பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் ஏப்ரல் 1 அன்று தொடங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில், வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள் என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவித்திருப்பதாவது:


“கொரொனாவால் ஏற்படப்போகும் பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதற்கு முடியாமல் திகைத்து நிற்கும் மத்திய அரசு, வங்கிகளை இணைப்பது இப்போது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும். இப்போதைக்கு அதை ஒத்திவைப்பது அவசியம்.

இப்போது ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் கடன் தவணைகளை 3 மாதங்களுக்கு ஒத்திப்போடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு வங்கி இணைப்பு மிகப்பெரிய தடையாக இருக்கும். கொரோனா ஆபத்து இந்த மூன்று வாரங்களோடு முடியப்போவதில்லை. அரசாங்கம் அடுத்தடுத்து பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும். அவை பெரும்பாலும் வங்கிகள் மூலமே செயல்படுத்தப்படும் நிலை உள்ளது.

வங்கி இணைப்புக்கு வெவ்வேறு விதமான நடைமுறைகளைப் பின்பற்றிவரும் 10 வங்கிகளை 4-ஆக இணைக்கும்போது ஏராளமான தொழில்நுட்பப் பிரச்னைகளை நிர்வாகம் எதிர்கொண்டுவருகிறது. ஏற்கனவே அந்த வங்கிகளில் கடன் கொடுப்பது போன்ற அத்தியாவசியப் பணிகளே அதனால் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிவாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்த அவற்றால் முடியாது. இது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும். எனவே வங்கி இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு நிதி அமைச்சரை வேண்டுகிறேன்.” இவ்வாறு ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading