ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“எனக்கு எதுவும் தெரியாது..” ஆன்லைன் ரம்மி நிறுவன CEOக்கள் சந்திப்பு குறித்து அண்ணாமலை பதில்..!

“எனக்கு எதுவும் தெரியாது..” ஆன்லைன் ரம்மி நிறுவன CEOக்கள் சந்திப்பு குறித்து அண்ணாமலை பதில்..!

அண்ணாமலை, ஆர்.என்.ரவி

அண்ணாமலை, ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில், பாஜக உறுதியாக உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆன்லைன் ரம்மி நிறுவன சிஇஓ-க்கள் ஏன் சந்தித்தனர் என்பது குறித்து தனக்கு தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், கடந்த 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளுநர் ஆர்.என்.ரவியை, ராஜ்பவனில் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது என்ன விஷயங்கள் பற்றிப் பேசப்பட்டன என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை. மேலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் நடைபெற்ற சந்தித்தாக வெளியான தகவலால் சர்ச்சை கிளம்பியது.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆன்லைன் ரம்மி நிறுவன சிஇஓ-க்கள் ஏன் சந்தித்தனர் என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறினார். மேலும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில், பாஜக உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Annamalai, Online rummy, RN Ravi