Home /News /tamil-nadu /

#MeToo: நான் நல்லவனா? கெட்டவனா? என யாரும் முடிவெடுக்க வேண்டாம்- வைரமுத்து

#MeToo: நான் நல்லவனா? கெட்டவனா? என யாரும் முடிவெடுக்க வேண்டாம்- வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

  • News18
  • 2 minute read
  • Last Updated :
கவிஞர் வைரமுத்து - பாடகி சின்மயி ஆகியோரிடையேயான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. இந்நிலையில், தன் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடுக்கலாம் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சின்மயி புகார் தொடர்பாக வைரமுத்து இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும், சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாகவும், இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.



இதற்கு ட்விட்டரில் பதில் சொல்லியுள்ள பாடகி சின்மயி, வைரமுத்துவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 



தமிழிசை கேள்வி: சந்தக்கவிஞர் மீது சந்தேகம் அதிகரிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கவிநடையில் விமர்சித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், சந்தி சிரித்தபின் வழக்கைச் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் வைரமுத்து என்றும், நிந்திக்க ஒரு வாரம் அவகாசம் கொடுத்துவிட்டு, சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.



இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால்,  ‘திரைத் துறையைச் சேர்ந்த பெண்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும்’ என்று கூறியுள்ளார். அமலாபால் விஷயத்தில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள விஷால் சின்மயி, தனுஸ்ரீ தத்தா ஆகியோரை மதிப்பதாகவும் கூறியுள்ளார்.

Published by:DS Gopinath
First published:

Tags: #MeToo, Actor vishal, Singer Chinmayi, Vairamuthu

அடுத்த செய்தி