ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நியூஸ் 18 செய்தி எதிரொலி : பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயர் இடம் பெற உறுதிச்சான்று தேவையில்லை

நியூஸ் 18 செய்தி எதிரொலி : பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயர் இடம் பெற உறுதிச்சான்று தேவையில்லை

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறை

பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயர் இடம் பெற செய்ய உறுதிச்சான்று தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயரை சேர்க்க பள்ளிகளில் உறுதிச்சான்றிதழ் கேட்கப்பட்ட நிலையில் நியூஸ் 18 செய்தியால், புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில், தேர்வு எழுதும் மாணவர்கள் பெயரை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. மாணவர் முந்தைய ஆண்டுகளில் தமிழ் வழியில் படித்தாரா? எந்த பள்ளியில் படித்தார் என்ற விவரங்களை ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து உறுதி சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும் என சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: கடந்த 7 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்: மா.சுப்பிரமணியன்

 மாணவர்களிடம் உறுதி சான்றிதழ் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளான நிலையில், அதுபற்றி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயர் இடம் பெற செய்ய உறுதிச்சான்று தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Department of School Education