சமூகவலைதளத்தில் வருவதையெல்லாம் பார்த்து ஆவிப்பிடிக்காதீர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

மா.சுப்பிரமணியன்

கோவிட் வைரஸ் என்பது புதுமையான நோயாகவும் இது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் தன்மை உடையதாக இருப்பதாலும் மருத்துவருடைய அறிவுரை இல்லாமல் புகை போடுதல் என்பதை பயன்படுத்தக்கூடாது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ளது. கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாசவிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரம் திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஆவிப்பிடித்தால் கொரோனாவை விரட்டி விடலாம் என்பது போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

    குக்கர் விசில் வரும் பகுதியில் பைப்பை சொருகி ஆவிபிடிக்கிறோம் என்கிற ரீதியிலான வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.

    இதுபோன்று வித்தியாசமான முறையில் ஆவி பிடிக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வட்டமடிக்கின்றன. ஆவி பிடித்தால் கொரோனாவை விரட்டலாம் என மருத்துவர்களோ, அரசாங்கமோ அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் மக்கள் தங்கள் இஷ்டங்களுக்கு இதுபோன்ற ஆவி பிடிக்கும் முறைகளை பின்பற்றுவதால் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    Also Read: குழந்தைகளை நோக்கி ஏன் ஏவுகணைகள் அனுப்பி கொலை செய்கிறீர்கள் - உடைந்து அழும் 10 வயது காசா சிறுமி

    பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல் மற்றும் சமூகவலைதளங்களில் வருகின்ற புகைப்போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா நோய்த்தொற்றுக்கு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொது மக்கள் தாங்களாகவே சுய வைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் தவறாகும். அவ்வாறான சிகிச்சை முறைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அழுத்தமான காற்று புகை போடுதல் என்ற ஒன்று தற்போது பொதுமக்களிடையே பரவி வருகிறது. இந்த புகை போடுதல் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று அவர்களின் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இது மருத்துவ நெறிமுறைகளின் படி இதனை மருத்துவ சிகிச்சையாக கருத முடியாது. நோய் தொற்று ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டுமுறை வைத்தியம் செய்வதை விட்டு மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழகம் முழுவதும் கோவிட் நோயாளிகளுக்காக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த கோவிட் வைரஸ் என்பது புதுமையான நோயாகவும் இது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் தன்மை உடையதாக இருப்பதாலும் மருத்துவருடைய அறிவுரை இல்லாமல் புகை போடுதல் என்பதை பயன்படுத்தக்கூடாது.

    சித்தா கோவிட் கேர் மையத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ முறையானது மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மாநில அரசு மருத்துவ குழு ஒன்று அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி உள் மருந்து மற்றும் பிற மருத்துவ முறைகளை கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published: