ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அப்டேட்

குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அப்டேட்

டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி

Tnpsc Group 2 Result | இதுதொடர்பாக செய்தி சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in  என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குரூப் 2  முதனிலைத் தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், குரூப் 2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

  இதையும் படிங்க : தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகரசபை கூட்டம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று குறை கேட்கிறார்?

  இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

  இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் குரூப் 2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

  இதையும் படிங்க : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை துவக்கம்.. 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வுமையம்

  இதுதொடர்பாக  சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in  என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Tamilnadu, TNPSC