’ஸ்டாலினை நம்பி வாக்களிக்காதீர்கள்’ - முதல் பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த் பேச்சு

வேனில் இருந்தபடியே பேசிய விஜயகாந்த், குரல் கரகரப்பை சரி செய்துகொண்டு எல்லோருக்கும் கேட்குதா என்று பேச்சைத் தொடங்கினார்.

’ஸ்டாலினை நம்பி வாக்களிக்காதீர்கள்’ - முதல் பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த் பேச்சு
விஜயகாந்த்
  • News18
  • Last Updated: April 15, 2019, 9:18 PM IST
  • Share this:
மு.க.ஸ்டாலினை நம்பி வாக்களிக்காதீர்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்து வருகிறார்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் சாம்பாலுக்கு வாக்கு சேகரித்து வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே தனது முதல் பிரச்சாரத்தை விஜயகாந்த் துவக்கியுள்ளார்.


வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கு துவங்குவதாக சொல்லப்பட்ட பிரச்சாரம் தாமதமாக 7 மணி அளவில் தான் துவங்கியது. எனவே மதியம் மூன்று மணி முதலே விஜயகாந்த்தை பார்க்க தே.மு.தி.க மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் காத்திருந்தனர்.

மாலை 6.45 மணி அளவில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்த விஜயகாந்த் இரண்டே வரியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

வேனில் இருந்தபடியே பேசிய விஜயகாந்த், குரல் கரகரப்பை சரி செய்துகொண்டு எல்லோருக்கும் கேட்குதா என்று பேச்சைத் தொடங்கினார். அப்போது, ’பா.ம.க வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்’ என்று உரையை முடித்தார்.விஜயகாந்தின் பேச்சைக் கேட்க மணிக்கணக்காக காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இதைத் தொடர்ந்து வட சென்னை மக்களவைத் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து கொளத்தூர், பெரம்பூர், ராயபுரம், திருவெற்றியூர், ஆர்.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
பின்னர், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவாக விருகம்பாக்கம் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading