Home /News /tamil-nadu /

சென்னையில் இருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்கம் தொடங்கியது - பல விமானங்கள் ரத்து

சென்னையில் இருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்கம் தொடங்கியது - பல விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையம்.

சென்னை விமான நிலையம்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழக அரசின் சார்பில் உள்நாட்டு விமான சேவை தொடங்குவதற்கான ஒப்புதல் நேற்று இரவு அளிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான முனையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார ஏற்பாடுகளை  விமான நிலைய சிறப்பு அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா, சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, சைலேந்திர பாபு உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

விமான நிலையத்தில் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் பலகைகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வு காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப படுகிறது.

சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணிகள் இன்றூ அதிகாலை 2 மணியிலிருந்து விமான நிலையத்தில் குவிய தொடங்கினர். காலை 6.35 மணிக்கு இண்டிகோ விமானம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. அதனைத்தொடர்ந்து மற்ற விமானங்களும் புறப்பட்டன.

இன்று சென்னையில் இருந்து இயங்கப்படும் விமானங்கள்

டெல்லி - 6:35 - (இண்டிகோ)

பெங்களூர் - 6:45 - (இண்டிகோ)

மதுரை - 7:05 - (இண்டிகோ)

பெங்களூர் - 7:15 - (ஸ்பைஸ் ஜெட்)

போர்ட் பிளேர் - 8:35 - (இண்டிகோ)

டெல்லி - 8:55 - (ஏர் ஏசியா)

கோயம்புத்தூர் - 9:15 - (ஸ்பைஸ் ஜெட்)

கவுஹாத்தி - 9:25 - (இண்டிகோ)

ரத்து செய்யப்பட்ட விமானங்கள்

மதுரை -  5:40 (இண்டிகோ)

மும்பை - 6 : 15 (இண்டிகோ)

மும்பை - 6 :25 (ஸ்பைஸ் ஜெட்)

பெங்களூர் -7: 20 (ஸ்பைஸ் ஜெட்)

சேலம் 7: 25

கொல்கத்தா 7 :35 (இண்டிகோ)

கெஹாத்தி 7 : 45 (ஸ்பைஸ் ஜெட்)

கொச்சி 8 : 00

பெங்களூர் 8 : 15 (ஏர் ஏசியா)

ஹைதராபாத் 8: 30 (இண்டிகோ)

புனே 9 : 00 (இண்டிகோ)

மும்பை 9 : 00 (இண்டிகோ)

ஹைதரபாத் 9 : 05 (ஏர் ஏசியா)

பெங்களூர் 9 :20 (ஸ்பைஸ் ஜெட்)

ஹைதராபாத் 9 :30 (இண்டிகோ)

மேற்கண்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்து சென்றனர்.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: Chennai Airport, CoronaVirus, Lockdown

அடுத்த செய்தி