Home /News /tamil-nadu /

நாய்க்கறி சர்ச்சையில் மேலும் 3 பேர் கைது!

நாய்க்கறி சர்ச்சையில் மேலும் 3 பேர் கைது!

கைப்பற்றப்பட்ட இறைச்சி (கோப்புப் படம்)

கைப்பற்றப்பட்ட இறைச்சி (கோப்புப் படம்)

ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த மாதம் 17-ம் தேதி வந்த ரயிலில் கெட்டுப்போன நிலையில் ஆட்டிறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது.  முதலில், இது நாய் இறைச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

  • News18
  • Last Updated :
    நாய்க்கறி சர்ச்சையில் தவறான தகவலை அளித்து, ராஜஸ்தானில் இருந்து ஆட்டுக்கறியை கொண்டு வந்ததாக மேலும் 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

    ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த மாதம் 17-ம் தேதி வந்த ரயிலில், 12 பெட்டிகளில் கெட்டுப்போன நிலையில் ஆட்டிறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது.  முதலில், இது நாய் இறைச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது ஆட்டிறைச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில், மீன் எனக் கூறி ஆட்டிறைச்சியை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சென்னையை சேர்ந்த கணேசன், ஜெய்சங்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும், இறைச்சியை அனுப்பியவர்களை பிடிப்பதற்காக, ரயில்வே பாதுகாப்பு பிரிவின் தனிப்படையினர் கடந்த வாரம் ஜோத்பூர் சென்றனர். அப்போது, ஜோத்பூரைச் சேர்ந்த இம்ரான்கான், காந்திகிராமைச் சேர்ந்த முன்னா குரேஷி ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில், சென்னையில் இறைச்சியை பெற்றுக்கொள்ள வேண்டிய உஸ்மான் பாஷா என்பவரை கைது செய்தனர். அப்போது, இறைச்சியை மீன் என கூறினால், அதிகாரிகள் அதை சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால், அவ்வாறு பதிவு செய்ததாக உஸ்மான் பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இவருடன், இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரயிலில் கொண்டு வரப்படும் இறைச்சிகள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட முதன்மை பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Dog Meat

    அடுத்த செய்தி