Home /News /tamil-nadu /

மீன் இறைச்சி என்ற பெயரில் வந்தது நாய் கறியா..? விசாரிக்க ராஜஸ்தான் செல்கிறது ரயில்வே போலீஸ்

மீன் இறைச்சி என்ற பெயரில் வந்தது நாய் கறியா..? விசாரிக்க ராஜஸ்தான் செல்கிறது ரயில்வே போலீஸ்

கைப்பற்றப்பட்ட இறைச்சி (கோப்புப் படம்)

கைப்பற்றப்பட்ட இறைச்சி (கோப்புப் படம்)

 சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சி நாய் கறியா அல்லது ஆட்டு கறியா என தமிழக உணவுத்துறை உறுதியான தகவல்களை தெரிவிக்கவில்லை

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சி நாய் இறைச்சி என்று தகவல் பரவியதால் விசாரணை நடத்த ரயில்வே போலீசார் ஜோத்பூர் செல்லுகின்றனர். 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் தொடர் வண்டியில் 20 பெட்டிகளில் இரண்டு டன் மீன் இறைச்சி கடந்த சனிக்கிழமை வந்தது. அதனை பெற்றுக்கொள்ள யாரும் வராததாலும், அதே நேரத்தில் அதில் அழுகிய வாடை வீசியதாலும் சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு துறை மற்றும் ரயில்வே சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அந்தப் பெட்டியில் இருந்த இறைச்சியில் நாயின் வாலைப் போன்ற உறுப்பு இருந்ததால் அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அதேநேரத்தில் அந்த இறைச்சியை கைப்பற்றிய அதிகாரிகள் அதன் மாதிரிகளை சோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமிருந்த இறைச்சியை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இதுவரை சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சி நாய் கறியா அல்லது ஆட்டு கறியா என தமிழக உணவுத்துறை உறுதியான தகவல்களை தெரிவிக்கவில்லை. மேலும் இது குறித்து விசாரணை செய்ய ரயில்வே போலீசார் ஜோத்பூர் செல்லுகின்றனர்.

Also see...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள், Dog Meat

அடுத்த செய்தி