தண்ணீர் தேடி வந்து நாய்களிடம் சிக்கிய மான் - காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்த மானை நாய்கள் கடித்துக்குதறியதைக் கண்ட இளைஞர்கள் ஓடிச்சென்று அதைக் காப்பாற்றியுள்ளனர்.

தண்ணீர் தேடி வந்து நாய்களிடம் சிக்கிய மான் - காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்
காப்பாற்றப்பட்ட மான்.
  • Share this:
இளையான்குடி அருகே கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்த மான் ஒன்றை நாய் கடித்ததைப் பார்த்த அந்தப் பகுதி இளைஞர்கள் விரைந்தோடிச் சென்று மானைக் காப்பாற்றியிருக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் தண்ணீர் அருந்துவதற்காக குடியிருப்புப் பகுதிக்குள் மான் வந்துள்ளது. அங்கிருந்த நாய் மானைக் கடித்ததால் அது தனது உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்த இளைஞர்கள் சிலர் நாயை விரட்டி விட்டு மானை மீட்டுள்ளனர்.

Also see:



 

பிறகு, அவர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மான் இயல்புநிலைக்குத் திரும்பியதும் காட்டுக்குள் விடப்படும் எனத் தெரிவித்தனர். காடுகளில் தொட்டி கட்ட வேண்டும் என்றும் அதன் மூலம் மான்கள் ஊருக்குள் வருவதையும் தவிர்க்கலாம் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading