அரசியல் பேசும் சர்கார் நடிகருக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா? : ராமதாஸ் கேள்வி

சர்கார் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்கிறார் ராமதாஸ்.

Web Desk | news18
Updated: November 8, 2018, 6:02 PM IST
அரசியல் பேசும் சர்கார் நடிகருக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா? : ராமதாஸ் கேள்வி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
Web Desk | news18
Updated: November 8, 2018, 6:02 PM IST
அரசியல் பொறுப்பு குறித்து பேசும் நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தீபாவளிக்கு திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தின் பல இடங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் நீக்கமற நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஊடகங்களின் மூலம் இளையதலைமுறைக்கு நல்வழி காட்ட வேண்டிய விஜய் சிகரெட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறி தீய வழியை காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சர்கார் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்படத்தின் கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் தேவையில்லை. அவற்றையெல்லாம் விட அபத்தமாக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் அனைவர் மத்தியிலும் விஜய் அப்பட்டமாக புகைப் பிடிக்கிறார். பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

சர்கார் திரைப்படத்தின் முதல் சுவரொட்டி கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அந்த சுவரொட்டியே விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியாகத் தான் அமைந்திருந்தது. அதைக் கண்டித்து அப்போதே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதுமட்டுமின்றி எத்தகைய விளம்பரமாக இருந்தாலும் அதில் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது குற்றம் என்பதால், அதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி விஜய் புகைப்பிடிக்கும் காட்சி அடங்கிய சுவரொட்டி விளம்பரத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நீக்கியது.

ஆனால், விளம்பரங்களில் நீக்கிய புகைப்பிடிக்கும் காட்சியை திரைப்படத்தில் பல இடங்களில் சர்கார் குழு திணித்துள்ளது. திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை இல்லை; புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்தை திரையில் ஓடவிட்டால் போதுமானது என்றாலும் கூட, விஜய்க்கும், இயக்குனர் முருகதாசுக்கும் சமூகப் பொறுப்பு இருந்திருந்தால் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும்.

ஒருவரின் வாக்கை இன்னொருவர் பதிவு செய்ததை எதிர்த்து போராடும் அளவுக்கு அரசியல் பொறுப்பு உள்ள சர்கார் நாயகனுக்கு, இளைய தலைமுறையை கெடுக்கும் வகையில் புகைப் பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்ற சமூகப் பொறுப்பு இருக்க வேண்டாமா? அத்தகைய பொறுப்பில்லாமல் குழந்தைகளைக் கூட கெடுக்கும் வகையில் புகைக்கும் காட்சிகளை திணித்திருப்பதைப் பார்க்கும் போது, சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாசும், நடிகர் விஜய்யும் செய்திருப்பது ஒரு விரல் புரட்சி அல்ல...இரு விரல் மோசடித்தனம் தான் என்பதை உணர முடியும்.

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்திருப்பது புகைப் பழக்கம் தான். அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இறப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாகும்.
Loading...
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் 10 முதல் 17 வயது வரையிலான காலகட்டத்தில் தான் சிறுவர்கள் புகைக்கக் கற்றுக் கொள்கின்றனர். இவ்வயதுப் பிரிவினரில் பெரும்பான்மையானோர் விஜய்யின் ரசிகர்கள் என்பதால் புகைக்கு எதிரான பரப்புரையைத் தான் அவர் செய்திருக்க வேண்டும். ஆனால், இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைப்பிடிக்க கற்றுகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்த பிறகும் தமது படங்களைப் பார்க்க வரும் தமது ரசிகர்களை புகைக்கு அடிமைகளாக மாற்றி வருகிறார் விஜய். இதைவிட பெரிய பாவத்தையும், துரோகத்தையும் ரசிகர்களுக்கு செய்ய முடியாது.

சிகரெட் விளம்பரங்களுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிட்ட நிலையில், திரைப்படங்கள் தான் சிறுவர்களிடம் சிகரெட்டைக் கொண்டு செல்ல கடைசி வாய்ப்பாக உள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டக்ளஸ் பெட்சர் கூறியிருந்தார். சர்கார் படத்தில் தேவையின்றி புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கும் போது, விஜய்யும், முருகதாசும் சிகரெட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகைக்கும் காட்சிகளை திணித்துள்ளனரோ என்ற ஐயம் எழுகிறது.

எனவே சர்கார் திரைப்படக்குழுவினரும், தயாரிப்பு நிறுவனமும் பொறுப்பை உணர்ந்து நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Also watch

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626