தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதன்படி, தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற விருப்பமுள்ள மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் என்றும், இந்தத் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Must Read : Night curfew | கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் இன்று முதல் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு...
கொரோனா பரவல் காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.