Home /News /tamil-nadu /

தேர்தலுக்காக கொரோனா பாதிப்பை குறைத்துக் காட்டவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தேர்தலுக்காக கொரோனா பாதிப்பை குறைத்துக் காட்டவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

கிண்டி கிங் மருத்துவமனையில் உள்ள 800 படுக்கைகளில் 20 பேர் தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை யார் வேண்டுமானாலும் சோதித்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

    தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளை குறைத்துக் காட்டவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னை அரும்பாக்கத்தில் திருநங்கை நமிதா மாரிமுத்துவின் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள நம்ம கபே தேனீர் கடையை திறந்து வைத்த பின் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகள் குறைத்துக் காட்டவில்லை. அப்படி காட்டவும் முடியாது. கிண்டி கிங் மருத்துவமனையில் உள்ள 800 படுக்கைகளில் 20 பேர் தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை யார் வேண்டுமானாலும் சோதித்துக் கொள்ளலாம்.

    இதையும் படிங்க: திமுகவும், அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டன - கமல் அட்டாக்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் குறைந்துள்ளது. எனினும் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கோடிக்கு மேலானவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தவில்லை.

    தமிழகத்தில் 92% பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். குஜராத்தை போல 10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க உள்ளோம்.

    தனியார் மருத்துவமனையில் தேங்கியிருக்கும் தடுப்பூசிகளை காலாவதியாவதற்குள் பயன்படுத்த மருத்துவமனை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Ma subramanian

    அடுத்த செய்தி