இந்திய மருத்துவ சங்கம் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம்.. தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

இந்திய மருத்துவ சங்கம் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம்.. தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

மருத்துவர்கள் போராட்டம்

நவீன மருத்துவத்தை வளர்த்து உலக அளவில் இந்தியாவுக்கு நல்ல மதிப்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணன்.

  • Share this:
ஆயுர்வேத முதுநிலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளிப்பதற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தால் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தம் நாடு முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. 

காலை 6 மணி முதல் மாலை 6 மணி முதல் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் பணிபுரியாமல் பல மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் உள் நோயாளிகள் பிரிவு, கோவிட், ஐசியு போன்ற அத்தியாவசிய பிரிவுகளில் கருப்புப் பட்டை அணிந்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.

கருப்பு பட்டை அணிந்து பணிபுரியும் மருத்துவர்கள்


சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “60-க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவர்கள் மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் 800 இடங்களில் 8-ஆம் தேதி போராட்டம் நடத்தினோம். இன்று ஒரு நாள் புற நோயாளிகள் சேவையை நாடு முழுவதும் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆயுர்வேதா சித்தா மருத்துவர்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவரவர் அவரவர் மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்” என சி என் ராஜா இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜன்நாயக அரசு மருத்துவர்கள் சங்கம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன்,  நவீன மருத்துவத்தை வளர்த்து உலக அளவில் இந்தியாவுக்கு நல்ல மதிப்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதத்தில், ஆயுர்வேதத்தின் குறிப்பிட்ட முதுகலை பயிற்சியாளர்களுக்கு ஒரு அங்கீகார அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. தீவிரம் அற்ற கட்டிகளை அகற்றுதல், குடலிறக்கம், நாசி மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைகள் போன்ற அறுவை சிகிச்சை முறைகளைச் செய்வதற்கான அனுமதியை அவர்களுக்கு வழங்கியது.

இந்திய மருத்துவ முறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான மத்திய மருத்துவ மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அந்த அறிவிப்பில், 39 பொது அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் கண், காது, மூக்கு மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட 19 நடைமுறைகளை (முதுகலை ஆயுர்வேத கல்வி) விதிமுறைகள், 2016, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் இதில் பட்டியலிட்டுள்ளது.
Published by:Gunavathy
First published: