5-வது நாளாக தொடரும் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் !

5-வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம்.

4 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில், 5 மருத்துவர்கள் 5-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஊதிய உயர்வு தொடர்பாக, 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அரசாணை 354-ஐ முறையாக அமல்படுத்துவது, முதுநிலை பட்டப்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, வெளிப்படையான கலந்தாய்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் ஆகிய நான்கும், மருத்துவர்களின் கோரிக்கைகளாக உள்ளன.

  இந்த கோரிக்கைகளுக்காக 5 மருத்துவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த 25-ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பேச்சுவார்த்தையின்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறிவிட்டு, 5 மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக, டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

  காவல்துறை பாதுகாப்பு வேண்டுமெனவும் அவர் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள மருத்துவர்கள், காய்ச்சல் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பாதிக்கப்படாது என்று மட்டுமே சுகாதாரத்துறை செயலாளரிடம் தாங்கள் உறுதி கொடுத்ததாகவும், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

  இந்த 4 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில், 5 மருத்துவர்கள் 5-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

  மருத்துவர் கவலைக்கிடம்...     உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களில் ஒருவர் உடல் நிலை மோசமானதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஏற்கெனவே இரண்டு பேர் சிகிச்சையில் உள்ளனர்.   

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: