கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு செவித் திறன் பாதிப்பு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு செவித் திறன் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு செவித் திறன் பாதிப்பு
கோபுப் படம்
  • News18
  • Last Updated: October 28, 2020, 5:32 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் நுரையீரலை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சிலரில் இது மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரத்த நாளங்களில் ஆங்காங்கே ரத்தம் உறைந்து விடுகிறது. ரத்தம் உறைவதால் உடம்பில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உள் காது தான் செவித்திறனுக்கு முக்கியமான பகுதியாகும். அந்த பகுதி ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்தால் செவித் திறன் பாதிப்பு ஏற்படும். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு ரத்தம் உறைவதை தடுக்கும் மருந்துகள் சிலருக்கு வழங்கப்படும். மருத்துவரின் உரிய ஆலோசனையுடன் இந்த மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும் என காது மூக்கு தொண்டை நிபுணர் ராஜசேகர் கூறுகிறார்.

கடந்த மூன்று மாதத்தில் ஏழு பேர் இது போன்ற பாதிப்புடன் வந்ததாக தெரிவிக்கிறார். இதுகுறித்த ஆய்வை தனது மருத்துவ நண்பர்களுடன் தொடங்கியிருப்பதாகவும் கூறுகிறார்.

Also read... நவம்பர் மாதத்துக்கு புதிதாக எந்த ஊரடங்கு தளர்வுகளும் இல்லை - மத்திய அரசு


செவி திறன் பாதிப்பே சிலருக்கு கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மெட்ராஸ் இ என் டி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து மருத்துவர் சுதா மகேஸ்வரி கூறுகிறார். லேசான அறிகுறிகள் முதல் தீவிர அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட எவருக்கும் காது கேளாமை ஏற்படலாம்.

எந்த வயது பிரிவினருக்கும் இது ஏற்படலாம். உள் காது பாதிக்கப்படும் போது தீவிர தலை சுற்றல் ஏற்படலாம். எனவே தலை சுற்றல், லேசான காது கேளாமை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறுகிறார். ஏற்கெனவே செவித்திறன் பாதிப்பு இல்லாதவர்களுக்கு புதிதாக பாதிப்பு ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading