குளிர்காலத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு.. மருத்துவர்கள் விளக்கம்..

குளிர்காலத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு.. மருத்துவர்கள் விளக்கம்..

மாதிரி படம்

ஈரமான முக கவசத்தால் வைரஸ் உள் நுழைவதை தவிர்க்க முடியாது. எனவே மழையில் நனைந்து விட்டால் முக கவசத்தை உடனே மாற்ற வேண்டும். ஈர கைகளில் சானிடைசர் பயன்படுத்தினால் அது பலன் தராது. எனவே சோப் போட்டு கைகளை கழுவுவதே சிறந்தது என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவத்துறை தலைவர் பரந்தாமன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
குளிர்காலத்தில் எந்த வைரஸும் உயிர்வாழ அதிக வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் இதற்கு பரிசோதனைகள் குறைந்ததும் ஒரு காரணம் என சுகாதாரத்துறை செயலர் குறிப்பிட்டுள்ளார். எனவே கொரோனா தொற்று குறைந்தது என அலட்சியமாக யாரும் இருந்துவிட முடியாது.

சாதாரண சளி இருமலை ஏற்படுத்தும் வைரஸ் குளிர் காலத்தில் அதிகம் உயிர் வாழ்வதாலேயே அதிகமானோருக்கு குளிர் காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது தான் கொரோனா வைரஸும். எனவே குளிர் காலத்தில் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளது.

மழைக்காலம் என்பதால் சளி இருமல் காய்ச்சல் ஏற்பட்டதாக நினைத்து கொரோனா பரிசோதனையை தள்ளிப்போட வேண்டாம். கொரோனா நோய் தீவிரத்தை குறைக்கவும் மரணங்களை தவிர்க்கவும் சீக்கிரமே பரிசோதனை செய்வது அவசியம் என்பது தான் நாம் கடந்த எட்டு மாதங்களில் கற்றுக் கொண்ட பாடமாகும் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவத் துறை தலைவர் பேராசிரியர் ரகுநந்தன் தெரிவித்தார்.

Also read... கொரோனா பரிசோதனைகளை குறைக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு!



அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளி மழையில் நனைந்து அதனால் தும்மல் இருமல் ஏற்பட்டால் அவரால் நோய் பரவ வாய்ப்புள்ளது.

ஈரமான முகக்கவசத்தால் வைரஸ் உள் நுழைவதை தவிர்க்க முடியாது. எனவே மழையில் நனைந்து விட்டால் முகக்கவசத்தை உடனே மாற்ற வேண்டும். ஈர கைகளில் சானிடைசர் பயன்படுத்தினால் அது பலன் தராது. எனவே சோப் போட்டு கைகளை கழுவுவதே சிறந்தது என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவத்துறை தலைவர் பரந்தாமன் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: