முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குழந்தைகளுக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்படுமா? மருத்துவர்கள் விளக்கம்

குழந்தைகளுக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்படுமா? மருத்துவர்கள் விளக்கம்

தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

குழந்தைகளிடம் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவுவதாகவும் ஆனால் லேசான பாதிப்பே ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் குழந்தைகளிடம் புதிய ஒமைக்ரான் உருமாறிய கொரோனா அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இது வரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் இருப்பது தென் ஆப்பிரிக்காவில் தான். அங்கு செய்யப்பட்டிருக்கும் முதல் கட்ட ஆய்வுகள் என்ன கூறுகின்றன என குழந்தை நல மருத்துவர்கள் விளக்குகின்றன.

பொதுவாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் ஒமைக்ரான் தொற்று தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் கணிசமான எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ளது என எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் எழிலரசி கூறுகிறார்.

தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி போடாத பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பு இல்லாத போதும் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து தான் உள்ளது" என்கிறார்.

ஒமைக்ரான் தாக்கம் குறித்து குழந்தை நல மருத்துவர் வெண்ணிலா கூறுகையில், "இதற்கு முன்பு இருந்த டெல்டா ஆல்ஃபா போன்ற வகைகள் குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

குழந்தை நல மருத்துவர் வெண்ணிலா

தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையை நோய் பரவலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். நம்மிடம் இந்நோய் பரவினாலும் இதன் பாதிப்பு லேசாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் நிலை (eligible) இல்லாமல் இருக்கிறது. 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை நாம் காப்பாற்ற வேண்டுமென்றால் பெற்றோர்கள் அவர்களை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே குழந்தைகளை காப்பாற்ற முடியும்" என்றார்.

Also read... வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன்

இந்தியாவில் தற்போது சைகோவி டி என்ற 12 முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கான தடுப்பூசியை சோதனை அடிப்படையில் பெரியவர்களுக்கு முதலில் செலுத்த தமிழ்நாடு உட்பட ஏழு மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தும் வகையில் சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் போது அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகிறார்.

First published:

Tags: Omicron