குடிபோதையில் ஆசனவாய் வழியாக மதுபாட்டிலை வயிற்றுக்குள் நுழைத்த இளைஞர்: மீட்ட மருத்துவர்கள்

மது பாட்டிலை ஆசன வாய்க்குள் நுழைத்துக் கொண்ட இளைஞரின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் பாட்டிலை வெளியே எடுத்தனர்.

குடிபோதையில் ஆசனவாய் வழியாக மதுபாட்டிலை வயிற்றுக்குள் நுழைத்த இளைஞர்: மீட்ட மருத்துவர்கள்
வயிற்றில் உள்ள மதுபாட்டில்
  • Share this:
நாகை அடுத்த நாகூரை சேர்ந்தவர் 29 வயதான இளைஞர் பக்கிரிசாமி. மது பிரியரான இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக இரண்டு மாதங்கள் மது குடிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்கிரிசாமி கடந்த 26 ஆம் தேதி மது வாங்கி அதிக அளவில் குடித்துள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடித்த பக்கிரிசாமி போதை தலைக்கேறி குவார்ட்டர் மது பாட்டிலை தனது ஆசன வாய்க்குள் சொருகியுள்ளார்.

இதில் பாட்டில் முழுவதும் வயிற்றுப்பகுதிக்குள் சென்றுவிடவே வயிறு வீக்கமடைந்து வலியால் துடி துடித்துள்ளார். இதையடுத்து அவரை நேற்று 28ம்தேதி அக்கம் பக்கத்தினர், நாகை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பக்கிரிசாமி உடலை ஸ்கேன் செய்து பார்த்ததில் முழுபாட்டிலும் வயிற்றுப்பகுதியில் இருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் பக்கிரிசாமிக்கு ஆசனவாய் வழியாக இனிமா கொடுத்து 2 மணி நேரம் போரட்டத்திற்கு பின், முழு பாட்டிலையும் காயமின்றி வெளியில் எடுத்து பக்கிரிசாமியை காப்பாற்றியுள்ளார் நாகை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சத்தீஸ்வரன்.

Also read... டிக்டாக்கில் சர்ச்சை வீடியோக்களை வெளியிட்ட 2 இளைஞர்கள் கைது


Also see...
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading