அறுவைச் சிகிச்சை செய்வதற்கு ஆயுஷ் மருத்துவர்களுக்கு அனுமதி - தமிழ்நாடு மருத்துவர்கள் போராட்டம்

அறுவைச் சிகிச்சை செய்வதற்கு ஆயுஷ் மருத்துவர்களுக்கு அனுமதி - தமிழ்நாடு மருத்துவர்கள் போராட்டம்

அறுவைச் சிகிச்சை செய்வதற்கு ஆயுஷ் மருத்துவர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கலில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அறுவைச் சிகிச்சை செய்வதற்கு ஆயுஷ் மருத்துவர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கலில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

  • Share this:
ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவம் மேற்படிப்பு படித்த மருத்துவர்கள் 58 விதமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மத்திய இந்திய மருத்துவ குழுமம் அறிவித்துள்ளது. அதேபோல், ஒரே நாடு ஒரே அமைப்பு என்ற அடிப்படையில் கலப்பட மருத்துவ முறை கொண்ட மருத்துவ படிப்பை 2030க்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் இந்த ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கலப்பு மருத்துவப் படிப்பு (mixopathy) கிடையாது. அப்படி செய்வது பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ முறை ஆகிய இரண்டுக்கும் நல்லதல்ல. இந்தியா நவீன மருத்துவமுறையில் முன்னோடியாக இருந்துவரக்கூடிய இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசின் திட்டத்தை ஏற்க முடியாது என்றார்.

Also read: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய விசாரணை குழு உத்தரவு

அரசின் இந்த திட்டத்தைக் கண்டித்து திண்டுக்கல்லில் இன்று (8.12.2020) நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு பல் மருத்துவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் மருத்துவர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: