முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஐதராபாத் மருத்துவமனையில் நோயாளியின் வயிற்றில் இருந்து 156 சிறுநீரக கற்கள் அகற்றம்!

ஐதராபாத் மருத்துவமனையில் நோயாளியின் வயிற்றில் இருந்து 156 சிறுநீரக கற்கள் அகற்றம்!

நம் நாட்டிலேயே பெரிய அளவிலான அறுவை சிகிச்சை இல்லாமல் லேபர்ஸ்கோபி (laporscopy) மற்றும் எண்டோஸ்கோபி(endoscopy) மூலம் இத்தனை கற்களை அகற்றியது இது தான் முதல் முறை என்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வி சந்திர மோகன் தெரிவித்தார்.

நம் நாட்டிலேயே பெரிய அளவிலான அறுவை சிகிச்சை இல்லாமல் லேபர்ஸ்கோபி (laporscopy) மற்றும் எண்டோஸ்கோபி(endoscopy) மூலம் இத்தனை கற்களை அகற்றியது இது தான் முதல் முறை என்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வி சந்திர மோகன் தெரிவித்தார்.

நம் நாட்டிலேயே பெரிய அளவிலான அறுவை சிகிச்சை இல்லாமல் லேபர்ஸ்கோபி (laporscopy) மற்றும் எண்டோஸ்கோபி(endoscopy) மூலம் இத்தனை கற்களை அகற்றியது இது தான் முதல் முறை என்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வி சந்திர மோகன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

    கர்நாடகாவில் வயிறு வலியால் அவதிப்பட்டவரின் சிறுநீரகத்தில் இருந்து 156 கற்கள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் 50 வயது முதியவர் ஒருவர் திடீரென கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது சிறுநீரகத்தில் பெரிய அளவிலான கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் இந்த சிறுநீரக கற்களால் ஆனது வழக்கம் போல அல்லாமல், மிகவும் சிக்கலாக இருக்கும் வகையில் சிறுநீர் பாதையில் அதன் இயல்பான நிலைக்கு பதிலாக வயிற்றுக்கு அருகில் அமைந்திருந்ததை மருத்துவர்கள் கவனித்தனர். சிறுநீரக கற்கள் ஒரு கொத்து போல காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இதனை ஒரு எக்டோபிக் சிறுநீரகத்தின் கேஸ் என PTI தெரிவித்துள்ளது. அசாதாரணமாக அமைந்துள்ள இந்த சிறுநீரக கற்களை அகற்றுவது சவாலான பணி என்று அறிந்த மருத்துவர்கள் உடனடியாக அந்த 50 வயதான நோயாளியின் உடலில் இருந்து சிறுநீரக கற்களை அகற்ற முடிவு செய்தனர்.

    ALSO READ |  ஹெலிகாப்டர் விபத்து எதிரொலி: விவிஐபி பாதுகாப்பு விதிகள் மறு ஆய்வு செய்யப்படும் - விமானப்படை தலைமை தளபதி

    ஆனால் வழக்கமான அறுவை சிகிச்சை செய்யாமல் லேபரோஸ்கோபி (laporscopy) மற்றும் எண்டோஸ்கோபி(endoscopy) மூலம் கற்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சிகிச்சை மூலம் அவர் சிறுநீரகத்தில் இருந்த 156 கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதற்கு சுமார் மூன்று மணி நேரங்கள் ஆனதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கடந்த இரண்டு வருடங்களாக அவரது சிறுநீரகத்தில் இந்த கற்கள் உருவாகி வந்துள்ளதாகவும், இதற்கு முன் வலி எதுவும் இல்லாததால் அவருக்கு கற்கள் இருப்பது தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர். இருப்பினும் திடீரென ஏற்பட்ட வலியால் அனைத்து பரிசோதனைகளையும் அவர் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்மூலம் சிறுநீரகத்தில் பெரிய அளவில் சிறுநீரக கற்கள் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

    ALSO READ |  18 வயதுப் பெண் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது, கணவரை ஏன் தேர்வு செய்யக் கூடாது? : அசாதுதீன் உவைசி கேள்வி

    இதனை தொடர்ந்து மூன்று மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவரது சிறுநீரகத்தில் உள்ள அனைத்து கற்களும் அகற்றப்பட்டு இப்போது அவர் நலமாகவுள்ளார் என்றும் நம் நாட்டிலேயே பெரிய அளவிலான அறுவை சிகிச்சை இல்லாமல் லேபர்ஸ்கோபி (laporscopy) மற்றும் எண்டோஸ்கோபி(endoscopy) மூலம் இத்தனை கற்களை அகற்றியது இது தான் முதல் முறை என்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வி சந்திர மோகன் தெரிவித்தார். ஒருவரின் உடலில் இருந்து 156 கற்களை லேபர்ஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி மூலம் அகற்றிய மருத்துவர்களுக்கு அனைத்து தரப்பினர்களும் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.

    First published: