உடல் பருமனுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்? மருத்துவர்கள் விளக்கம்!

கொரோனா வைரஸ் தாக்கம் சிலரில் லேசான பாதிப்பையும் சிலரில் தீவிர பாதிப்பையும் ஏற்படுத்துவதற்கு ஒவ்வொருவரின் எதிர்ப்பு சக்தி மாறுபடுவது தான் காரணமாக இருக்கிறது. உடல் பருமன் இருப்பவர்களுக்கு பொதுவாகவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

உடல் பருமனுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்? மருத்துவர்கள் விளக்கம்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 16, 2020, 4:40 PM IST
  • Share this:
உடல் பருமனுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

ஒருவரின் உயரத்துக்கு ஏற்பில்லாத எடை கொண்டவர்கள் பருமனாக இருப்பவர்களாக வகைப்படுத்தப்படுகின்றனர். உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்யமற்றவர்கள் அல்ல. உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் உடல் பருமனாக இருப்பவர்களுக்கே கொரோனா ஆபத்து அதிகரிக்கிறது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 21000க்கும் மேற்பட்ட அவர்களில் 304 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 40 சதவீத பேருக்கு உடல் பருமன் இணை நோயாக இருந்திருக்கிறது.


கொரோனா வைரஸ் மனிதனின் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உடல் பருமன் அனைத்து வகையிலும் ஏற்படுத்தி வருவதால் இது ஆபத்தான நோய் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Also read... அடர்ந்த காட்டின் வழியாக தினமும் 17 கி.மீ., பயணம்செய்து பழங்குடி மாணவர்களுக்கு கற்பிக்கும் கேரள ஆசிரியர்..உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சிலநேரங்களில் கொழுப்பு சத்து ரத்த நாளங்களில் சேகரிப்பு அடைந்து ஆக்சிஜன் போக்கை தடுக்கும். உடற்பயிற்சி இல்லாமல் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நுரையீரல் பலவீனமாக இருக்கக்கூடும். கரோனா வைரஸ் தாக்கினால் அதை எதிர்த்து போராட நுரையீரல் தயாராக இருக்காது. எனவே உடற்பயிற்சி மிக அவசியமாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.கொரோனா வைரஸ் தாக்கம் சிலரில் லேசான பாதிப்பையும் சிலரில் தீவிர பாதிப்பையும் ஏற்படுத்துவதற்கு ஒவ்வொருவரின் எதிர்ப்பு சக்தி மாறுபடுவது தான் காரணமாக இருக்கிறது. உடல் பருமன் இருப்பவர்களுக்கு பொதுவாகவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே கொரோனா வைரஸ் தாக்கினால் அவர்களுக்கு அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் புரதம் அதிகமான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading