விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படும் கைகள் - பாதுகாக்கும் வழிமுறைகளை விளக்கும் மருத்துவர்கள்

மருத்துவர்

விபத்துகளின்போது கைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வது குறித்து மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

  • Share this:
விபத்துகளால் கைகளில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவும் நவீன சிகிச்சை முறைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்திய தேசிய கைகள் அறுவை சிகிச்சை சங்கம் 1973 ஆம் ஆண்டு ஆகஸ்டம் மாதம் 23-ம் தேதி நிறுவப்பட்டது.

இந்தச் சங்கத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சற்றேறக்குறைய 800 பேர் உள்ளனர். இவர்களின் ஒருங்கிணைப்பில், கைகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளுக்கு அதி நவீன தொழில் நுட்பத்துடன் நுண் & சீரமைக்கும் அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றனர்.

கைகளில் ஏற்படும் விபத்து குறித்து பேசிய கை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டெரன்ஸ் ஜோஸ் ஜெரோம், ‘தமிழ்நாட்டில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு  தொழிற்சாலைகளில் 1.18 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தொழிற்சாலைகளில் பணியாற்றும் போது ஆண்டிற்கு 1.75% விபத்துகள் ஏற்படுகின்றன. உயிரிழப்பு ஏற்படும் வகையில் 38 பேர் வரையிலும் உயிராபத்து இல்லாமல் 2,000த்திற்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்குகிறார்கள்.

இதில், அதிகபட்சம் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளில் 25% வரை விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளால் 20-25% வரை கைகளில் காயம் ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களே அதிகம் காயமடைகின்றனர். இதனால் வேலை, வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மொத்தம் 42 நாட்களுக்கு மேல் உழைக்கும் நாட்கள் வீணாகின்றன. விபத்துகளை வரும் முன் காக்கும் வகையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

அதையும் தாண்டி, விபத்துகள் ஏற்பட்டால் சுத்தமான துணியைக் கொண்டு, காயம் பட்ட இடத்தில் 3 நிமிடம் வரை அழுத்திப் பிடித்தால் ரத்தம் வெளியாவது நின்று விடும். அடிபட்ட கையை இதயத்திற்கு மேல் உயரமாக வைத்திருக்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இந்திய தேசிய கைகள் அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி மஹாஜன், ‘சிகிச்சை மட்டுமின்றி, கெடு வாய்ப்பாக  ஏற்படும் விபத்தில் பல இடங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் கைகளை இழக்கிறார்கள், அதனால், நிரந்தர  ஊனமடைகிறார்கள். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு அடைகிறது. இதனை தடுக்க, அனைவருக்கும் தகவல், விழிப்புணர்வு மற்றும் கைகளுக்கு ஏற்படும் விபத்தினால் பாதிப்பை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம் என்கிறார்.

மேலும், ஆகஸ்டு 23 இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கைகள் அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு மற்றும் முதலுதவிக்கான பரப்புரை, கைகளில் விபத்தினால் அடிப்படும் போது ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்கும் முறைகள் குறித்து பொது மக்களுக்கும், தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கும், தொழிற்சாலையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், ESI, ஆரம்ப சுகாதார மருத்துவர்களுக்கும், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த  ஊழியர்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் விபத்து பகுதிகளில் சிறப்பாக பணி புரியும் பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்களுக்கும் எடுத்து கூறியும், விளக்க படம், காணொளி காட்சி மூலம் விளக்கி வருகின்றனர்.

பயிற்றுவித்தலையும், முதலுதவி முறைகளை செய்துக்காட்டியும் அடிப்பட்ட கைகளை முறையாக உயர்த்தி அதற்கு தகுந்த முறையில் மாவுகட்டு போடும் முறைகளையும் செய்து விளக்கி கொண்டு வருகின்றனர். விபத்தில் கைகளில் எற்படும் காயங்களுக்கு ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு சுத்தப்படுத்தி முதலுதவி செய்ய முடியும் என்பதையும் படங்கள், காணொளி காட்சி மூலம் விளக்கிக் கொண்டு வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக, கைகள் விபத்தில் அடிபட்டவுடன் யாரும் பதற்றமில்லாமல் அந்த கையை பத்திரமாக தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும். உடனடியாக  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். உடலுக்கு எவ்வாறு உயிர் முக்கியமோ, அதுபோல, நாம் சிறப்பாக செயல்பட கைகள் முக்கியம். அவற்றை மிகுந்த கவனமுடன் காக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
Published by:Karthick S
First published: