கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என விரிவாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளன்ர்.

கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?
கோப்புப்படம்
  • Share this:
உலக அளவில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டுவரும் நிலையில் பலருக்கும் எழுந்துள்ள கேள்வி கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? சாதாரண சளி தொந்தரவுக்கும் கொரோனாவிற்கும் உள்ள வித்யாசம் என்ன? என்பது தான்

இதற்கு ஆறுதலாக மருத்துவர்கள் சொல்லும் செய்தி 90 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனாவால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எப்பது தான். ஆனாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்களால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கொரோனா நோயாளிகளுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சாதாரண சளி தொந்தரவுக்கே கொரோனா என்று பெற்றோர்கள் அச்சப்படாமல் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


காய்ச்சலோ, சளி தொந்தரவு வந்தால் முதலில் தெர்மா மீட்டரில் சோதனை செய்து குழந்தையில் உடல் வெப்பநிலையை அறிந்த பிறகு மருத்துவர் அறிவுறுத்திய அளவு காய்ச்சல் மருத்து கொடுக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது

கொதிக்கவைத்து வெதுவெதுப்பான தண்ணீர் அதிகம் கொடுப்பது நல்ல பலனை அளிக்கும் என குறிப்பிடும் மருத்துவர்கள் குடிக்கும் அளவிற்கு சிறுநீர் கழிக்கின்றனர்களா என்றும் கவனிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அதிக அளவு காய்ச்சல், சோர்வு, பசியின்மை, சிறுநீர் முறையாக போகாமல் இருந்தல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அனுக வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை.

Also read... ஒரே மளிகைக்கடையில் பணியாற்றிய 17 பேருக்கு கொரோனா - ஆரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடல்

முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை கடைபித்தால் குழந்தைகளை தொற்று நோய் அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading